கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்ப்புலிகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி செயலர் வீரபெருமாள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகரச் செயலர் முனியசாமி, ஒன்றியச் செயலர்கள் மகேஷ்குமார் (கிழக்கு), கருப்பசாமி (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், நெல்லையில், மாவீரன் ஒண்டிவீரன் மணிமண்டபத்தை முழுமைப்படுத்தி அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். சென்னையில் மாவீரன் ஒண்டிவீரனுக்கு வெண்கலச்சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்டச் செயலர் தாஸ், துணைச் செயலர் பீமாராவ், கொள்கை பரப்புச் செயலர் கத்தார்பாலு, செய்தித் தொடர்பாளர் கனியமுதன், கயத்தாறு மேற்கு ஒன்றியச் செயலர் வேல்முருகன், புதூர் கிழக்கு ஒன்றியச் செயலர் கணேசன், நகரச் செயலர் மாரிமுத்து ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மாநில கொள்கை பரப்புச் செயலர் கலைவேந்தன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இதில், நகரச் செயலர் தமிழரசு, மாவட்ட இளம்புலிகள் அணிச் செயலர் கோவிந்த், தொழிலாளரணிச் செயலர் வீரசமர், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி செயலர் மாரிமுத்து உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.