தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 26,480 மாணவர், மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-18 ஆம் கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,596 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
32,435 மாணவர், மாணவிகளுக்கு ரூ.9.41 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகையும், 26,268 மாணவர், மாணவிகளுக்கு சீருடைகள், 2,06,735 பாடப்புத்தம், 1,76,333 பாடக்குறிப்பேடு, 1,62,581 காலணி, 43,928 பேருந்து பயண அட்டை, 20,290 நிலவரைபட புத்தகம், 29,015 கிரையான்ஸ், 48,340 வண்ணப்பென்சில், 21,844 ஜியாமென்டிரி பாக்ஸ் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2018-19 ஆம் கல்வி ஆண்டில், இதுவரை 26,480 மாணவர், மாணவிகளுக்கு சீருடைகள், 2,06,835 பாடப்புத்தகம், 1,76,400 பாடக்குறிப்பேடு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.