மாநில அளவிலான கராத்தே போட்டியில், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளி ஆசிரியர் தங்கப்பதக்கம் வென்றார்.
தூத்துக்குடி மாவட்ட வேல்டு கோஜுரியு கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில், கருப்பு பெல்ட் சீனியர் சண்டை பிரிவில் சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளி கராத்தே ஆசிரியர் முத்துராஜா வெற்றிபெற்று தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு, கராத்தே பள்ளியின் இந்திய தொழில்நுட்ப இயக்குநர் ரென்சி சுரேஷ்குமார், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் முருகன், பிஎஸ்ஒய் கல்வி குழுமத் தலைவர் பாண்டிசரவணன் ஆகியோர் பரிசு வழங்கினர். மேலும், தங்கப்பதக்கம் பெற்ற ஆசிரியரை, கோஜுரியு கராத்தே பள்ளி தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கெளரிசங்கர், மாவட்டச்செயலர்கள் பாரத்,ஆங்குவேல், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளித் தாளாளர் செல்வராயர், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.