கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திருநெல்வேலி மண்டல அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி 10ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மண்டல அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக.10) நடைபெறுகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி, வடக்கன்குளம் இந்தியன் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன.
ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.