திருச்செந்தூர் கோயிலில் மூன்றுவேளை அன்னதானத் திட்டத்தை தொடங்க கோரிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று வேளை அன்னதானத் திட்டத் தை தொடங்க வேண்டும் என பாரத திருமுருகன் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று வேளை அன்னதானத் திட்டத் தை தொடங்க வேண்டும் என பாரத திருமுருகன் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் மெஞ்ஞானபுரத்தில் மாநிலத் தலைவர் ஏ.வி.பி.மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் செல்வம், முத்துராமலிங்கம்  முன்னிலை வகித்தனர். பழனி கோயிலைப் போன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் மூன்று வேளை அன்னதானத் திட் டம் தொடங்க வேண்டும். வெயில் காலமாக இருப்பதால் திருச்செந்தூர் கோயில் வெளிப் பிரகார மண்டபம்  அருகில் தரை விரிப்புகள் விரிக்கவேண்டும். ஆத்தூர் சோமசுந்தரி அம்மன் கோயில் தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும். குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை சித்தர் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை, மந்திரங்கள் அடங்கிய காயத்ரி மந்திர புத்தகத்தை வெளியிட ஏ.வி.பி.மோகனசுந்தரம் பெற்றுக்கொண்டார். அமைப்பின் திருச்செந்தூர் நகரத் தலைவர் மணி சாஸ்திரி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com