Enable Javscript for better performance
ஆறுமுகனேரி இந்து சரஸ்வதி பள்ளிகளின் ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி இந்து தொடக்கப் பள்ளியின் 141ஆவது ஆண்டு விழா, இந்து மேல்நிலைப் பள்ளியின் 21ஆவது ஆண்டு விழா மற்றும் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியின் 109ஆவது ஆண்டுவிழா ஆகியவை இரு தினங்கள் நடைபெற்றது.
    ஆண்டு விழாவில்  இந்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் குமரன் ஆண்டறிக்கை சமர்பித்தார். கடந்த அண்டு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிலிடம் பெற்ற மாணவி மகராசி, 2ஆம் இடம் பெற்ற சிந்துபிரியா ஆகியோருக்கு கல்யாணராமன், திருவேங்கடத்தான் நினைவு பரிசு வழங்கினார். இந்து தொடக்கப்பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜோதி எபனேசர், சரஸ்வதி நடுநிலைப் பள்ளியின் ஒய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் கஸ்தூரி ஆகியோருக்கு அவர்களது பணியைப் பாராட்டி தங்க மோதிரம் பரிசாக வழங்கபபட்டது.
    பள்ளிச் செயல ர் சிவசுப்பிரமணியன், சென்னை தொழிலதிபர் லெட்சுமணன், நகர் நல மன்றத் தலைவர் பூபால்ராஜன், தேசிய நல்லாசிரியை விருது பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியை கட்டித்தங்கம், அரிமா சங்க பட்டயத் தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முகவெங்கடேசன், நகர காங்கிரஸ்  தலைவர் எல். ராஜாமணி, அதிமுக முன்னாள் நகர செயலாளர் இ. அமிர்ததராஜ், உள்பட பலர்கலந்து கொண்டனர். இந்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாரிதங்கம் வரவேற்றார். சரஸ்வதி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் உதயசுந்தர் நன்றி கூறினார்.  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ச்சி, ஏற்பாடுகளை இந்து மேல்நிலைப் பள்ளி கண்காணிப்பாளர் பிச்சைமுத்து செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai