Enable Javscript for better performance
உடன்குடி பேரூராட்சி முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
    உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் மலைபோல குவிந்து காணப்படுகின்றன. உடன்குடி சமத்துவ நகர் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் சீரான விநியோகம் இல்லாததால் அப்பகுதியில் மக்கள் குடி நீருக்கு சிரமப்படுகின்றனர்.உடன்குடி வாரச்சந்தையின் பின்புறமுள்ள பகுதியின் குறுகிய பாதையில் மது அருந்துதல்,சிறுநீர் கழித்தல் உள்ளிட்டை நடைபெறுவதால் பொது மக்கள்,பெண்கள் செல்ல பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.  பேரூராட்சியில் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கவதிலும்,தீர்வை வழங்குவதிலும் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.பேரூராட்சி செயல் அலுவலர் வேலுச்சாமி பணி நிமித்தம் தூத்துக்குடி சென்றிருந்ததால்,பேரூராட்சி இளநிலை உதவியாளர் சரவண வேல்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அவர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு   மக்கள் குறைகள் தீர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். முற்றுகைப் போராட்டத்தில் உடன்குடி ஒன்றிய விவசாயிகள்-பொதுமக்கள் நலச்சங்க தலைவர் சந்திரசேகர்,சமூக ஆர்வலர்கள் குணசீலன், மணிராஜ்,அம்புரோஸ்,தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இ யக்க மாநிலத் தலைவர் முகைதீன் தேமுதிக நகரத் த லைவர் வி.விஜயமுத்துபாண்டியன்,எஸ்டிபிஐ நகர அமைப்பாளர் காஜா முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai