Enable Javscript for better performance
கோவில்பட்டியில் பாஜக கொடி கம்பம் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மேற்கு காவல் நிலையம் முன் வியாழக்கிழமை திரண்டனர். 
    கோவில்பட்டி லக்குமி ஆலை மேம்பாலம் அருகே இருந்த பாஜக கொடிக்கம்பத்தை புதன்கிழமை மர்ம நபர்கள்  சேதப்படுத்தினராம். இதையடுத்து, கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க   வலியுறுத்தி கொடிக்கம்ப பொறுப்பாளர் ரா.பாலகுமார் தலைமையில், மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பாலு மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் மாரிமுத்து, குருசாமி, முத்துவேல், ராஜேந்திரன், விஜயராஜ், முனியராஜ், சீனிவாசன் உள்ளிட்ட பலர் மேற்கு காவல் நிலையம் முன் திரண்டனர். பின்னர், கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, கட்சியினர் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai