Enable Javscript for better performance
சாத்தான்குளம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் மேரி  இம்மாக்குலேட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் டாக்டர்  அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து  இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 
      சிதம்பராபுரம் பங்குத் தந்தை பபிஸ்டன்  தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.  இதில்  அகர்வால் கண் மருத்துவமனைக்குழுவினர் மாணவ,மாணவியருக்கு கண் பரிசோதனை செய்து  உரிய ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கினர். இதில் 240 மாணவ மாணவியரும்,பெற்றோரும்  பயனடைந்தனர்.
     ஏற்பாடுகளை பள்ளி முதல்வரும் தாளளருமான செல்வராயன்,  அகர்வால் கண் மருத்துவமனை பணியாளர் வேலு  ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai