Enable Javscript for better performance
சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 09th February 2018 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டப் பணி முடிவடையும் தருவாயில், சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையம் உள்ளிட்ட இரு இடங்களில் உள்ள நீருந்து நிலையங்களை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். 
    கோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையம், இளவேளங்கால் மற்றும் கோவில்பட்டியில் உள்ள நீருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.  பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: கோவில்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.81.82 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக கட்டப்பட திட்டமிட்டுள்ள 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 
    எஞ்சிய 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளது.
    இதன் மூலம் 51.15 கி.மீ. நீளத்துக்கு குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 15.90 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.50 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக பெறப்பட்டு, தனி நபர் குடிநீர் விநியோகம் தினமும் 95 லிட்டர் கூடுதலாக வழங்கப்படும்.  ஏற்கெனவே பெறப்படும் குடிநீருடன் சேர்த்து மொத்தம் 15.9 மில்லியன் லிட்டர் குடிநீர் தனி நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற அடிப்படையில் நகரின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் சீரான முறையில் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். 
    ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் அச்சையா, பொறியாளர் குருசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் விஸ்வலிங்கம், உதவி செயற்பொறியாளர் விஜயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai