Enable Javscript for better performance
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்த்துடன் தொடங்கியது.
     கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து  திருவிழா கொடிப்பட்டம்  பல்லக்கில் வைத்து திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.15 மணிக்கு த.அசோகன் வல்லவராயர் திருவிழா கொடியினை ஏற்றினார். 
     தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.15 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடியேற்றும் நிகழ்ச்சியில் திருக்கோயில்  இணை ஆணையர் பா.பாரதி, இணை ஆணையரின் நேர்முக எழுத்தர் கார்த்திகேயன், சிவன் கோயில் மணியம் நவநீதகிருஷ்ணன், திருக்கோயில்  பணியாளர்கள் பிச்சையா,  மது, வடிவேல், பிச்சையா   உள்பட திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர். 
      பத்துநாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவா(பிப்.17) அன்று அதிகாலை 6.00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 
      திருவிழா  ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் பா.பாரதி,  அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ.நாராயணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai