Enable Javscript for better performance
தூத்துக்குடியில் பிப்.16இல் மாநில இறகுப்பந்து போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் பிப்.16இல் மாநில இறகுப்பந்து போட்டி

    By DIN  |   Published on : 09th February 2018 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    2017-2018 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி விளையாட்டரங்கில் பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 
    அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்டத்துக்கு 8 பேர் வீதம் 256 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
    போட்டியில் முதலிடம் பெறும் நான்கு ஆண்கள் மற்றும் 4 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.8 லட்சமும், 2ஆவது இடம் பெறும் 4 ஆண்கள் மற்றும் 4 பெண்களுக்கு தலா ரூ.75,000- வீதம் ரூ.6 லட்சமும், 3 ஆவது இடம் பெறும் 4 ஆண்கள் மற்றும் 4 பெண்களுக்கு  தலா ரூ.50,000- வீதம் ரூ.4 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.18 லட்சம் பரிசுத் தொகை வெற்றி பெற்றவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai