Enable Javscript for better performance
தூய மரியன்னை கல்லூரியில் கலை விழா- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நடைபெற்ற கலை விழாவில், ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    தூய மரியன்னை கல்லூரியில் 70 ஆவது ஆண்டு கலை விழா அண்மையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. விழாவை, திரைப்பட நடிகர் மகேஷ், உதவி இயக்குநர் கார்த்திக் ராகுல், தொழிலதிபர் பூர்ணிமா ஆறுமுகம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
    மொத்தம் 18 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாணவிகளுக்கு 22 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆங்கிலத் துறை மாணவிகள் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். அவர்களுக்கு கோப்பையை குரூஸ்புரம் பங்குத்தந்தை ராஜா ரொட்ரிகோ வழங்கினார்.
    பரிசளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் ரோஸ்லின் மேரி, துணை முதல்வர் ஜெனோ, செயலர் ஜெஸி, தொழிலதிபர் ராஜீவி மோகன்ராஜ், பேராசிரியைகள் ஜாக்குலின் லியோ, அட்ரினோ பல்டானா, ரொபினா, புளோரா, ரன்ராக் கொரைரா, ரோஜாப்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai