Enable Javscript for better performance
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் புதன்கிழமை இரவு லாரி மோதி உயிரிழந்தார்.
    தூத்துக்குடி பிரையண்ட்நகர் 6 ஆவது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (23). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். புதன்கிழமை இரவு தனது மோட்டார் சைக்கிளில் 3 ஆம் மைல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நண்பரை சந்திக்க சென்றாராம்.
    தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai