Enable Javscript for better performance
விநாடி-வினா போட்டி: சக்தி விநாயகர் பள்ளி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    சாயர்புரத்தில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் தூத்துக்குடி சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர்.
    தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரியில் கணிதத் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விநாடி-வினா போட்டி அண்மையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 11 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், தூத்துக்குடி சிதம்பரநகர் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் கணேஷ், அரவிந்தன் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்தனர். அவர்களுக்கு பள்ளிச் செயலர் பழனிசாமி, முதல்வர் கனகராதா, துணை முதல்வர் விஜயலட்சுமி, தலைமையாசிரியை விமாலா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai