Enable Javscript for better performance
வெள்ளாளன்விளையில் திமுக கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையில் திமுக சார்பில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
    ஒன்றியச் செயலர் டி.பி.பாலசிங் தலைமை வகித்தார். கிளைச் செயலர் அற்புதஅரசி, ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் லியாஸ்கர், கிளை நிர்வாகிகள் கிதியோன், யோகராஜ் ஸ்தோவான், சுகிர்தமணி, செல்வராஜ் ஐசக், அவைத் தலைவர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கட்சிக் கொடியேற்றிவைத்து பேசினார்.
    இதில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முத்தையாபுரம் திமுக அமைப்பாளர் கருணாகரன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மகாவிஷ்ணு, உடன்குடி நகரச் செயலர்  ஜான்பாஸ்கர்,  மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி நகரப் பொருளாளர் தங்கம், வழக்குரைஞர்  கிருபாகரன், பரமன்குறிச்சி ஊராட்சி செயலர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai