Enable Javscript for better performance
வேலைவாய்ப்பற்றோர்  உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்றோர்  உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொறுப்பு வகிக்கும் மரிய சகாய ஆன்டனி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ளத் தேவையான தொழில்பயிற்சிக் கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
    ஏற்கெனவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள் ஆவர். இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே.
    பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 31.12.2012-க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
    பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. குடும்ப ஆண்டு வருமானத்தில் உச்ச வரம்பு ஏதும் கிடையாது. பத்து ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.
    தகுதியும், விருப்பமும் உள்ளோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று, தேசிய மயமாக்கப்பட்ட (மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களது பெயரில் தொடங்கப்பட்ட மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்ட) வங்கிக் கணக்குப் புத்தகம்,  ஊனமுற்றோர் அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி ஆசிரியர் காலனி, முதல்தெரு (கிழக்கு) பாண்டியன் கிராம வங்கியின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 23ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai