கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட திமுக வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்காக கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்காக கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விவசாயம் தடையின்றி நடைபெறுவதற்கு மருதூர் அணை மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் ஆகிய நான்கு கால்வாய்களில் தண்ணீர் திறப்பது அவசியமாகும். எனவே, பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.
இந்த நான்கு கால்வாய்களிலும் தண்ணீர் திறப்பதால் சுமார் 95 வருவாய் கிராமங்களில் உள்ள 53 பெரிய குளங்களில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் மொத்தம் 46,200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறும்.
கார் சாகுபடி கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் நடைபெறவில்லை. முன் கார் பருவ சாகுபடிக்கான தண்ணீர் திறப்பும் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. நிகழாண்டு பாபநாசம் அணையில் 93 அடி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், கார் சாகுபடி, வாழை, வெற்றிலை விவசாயத்தை பாதுகாத்தல், ஆடு, மாடு வளர்த்தல், குடிநீர் தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும், கடைமடை வரை தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com