Enable Javscript for better performance
உடன்குடியில் ஸ்ரீராம நவமி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீராம நவமி விழாவையொட்டி, பாரத மாதா சேவா சங்கம் சார்பில், இந்து எழுச்சி ஊர்வலம் உடன்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    உடன்குடி அருள்மிகு கண்டுகொண்ட விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து இந்து எழுச்சி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை விவேகானந்தா கேந்திர பாலர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் எஸ்.சண்முகபாரதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சந்தையடியூர் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நிறைவடைந்தது.
    இந்து ஒற்றுமை, இந்தியர்களின் திருவுருவமாக ராமர் எவ்வாறு திகழ்கிறார் என்பது குறித்து இந்து சமயப் பேச்சாளர் பா.ஜெகதீசபாண்டியன் பேசினார்.
    இதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பாலன், இந்து மகாசபா மாநிலச் செயலர் சு. அய்யப்பன் உள்பட ஏராளமான பெண்கள், சிறுவர்கள் கலந்துகொண்டனர். ராமர், அ னுமார் வேடம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai