Enable Javscript for better performance
கோவில்பட்டியில் மார்ச் 27இல் நடக்கவிருந்த சாலை மறியல் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் மார்ச் 27இல் நடக்கவிருந்த சாலை மறியல் ரத்து

    By DIN  |   Published on : 24th March 2018 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே நிலைய மேம்பாலம் வரையில் நடைபெறவுள்ள சாலை விரிவாக்கப் பணியில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி முறையாக பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் இம்மாதம் 27இல் நடத்தவிருந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
    கோவில்பட்டி பிரதான சாலையில் 2.20 கி.மீ. தூரத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஓடைக்கடை மற்றும் தனி நபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வலியுறுத்தி இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
    இந்நிலையில், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. துணை வட்டாட்சியர் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சிவராமன், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவிஜயன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் தமிழரசன், ஐ.என்.டி.யூ.சி. ராஜசேகர், அண்ணா தொழிற்சங்கம் ராமகிருஷ்ணன், 5ஆவது தூண் அமைப்பின் நிறுவனர் சங்கரலிங்கம், தொமுச விஜயபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், உடன்பாடு எட்டப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக தொழிற்சங்கம் அறிவித்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai