Enable Javscript for better performance
கோவில்பட்டியில் 4 நாள்கள் மின் கட்டண வசூல் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இம்மாதம் 29ஆம் தேதி முதல் 4 நாள்கள் மின் கட்டணம் வசூலிக்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
    இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
    கோவில்பட்டி நகர், கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு அலுவலகங்களில் மின் விநியோகம் பயன்படுத்தப்படும் மின் நுகர்வோர் கோவில்பட்டி நகர்ப் பிரிவு அலுவலக வசூல் மையங்களில் கணினி தொழில்நுட்பம் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, இம்மாதம் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வû மின் கட்டணம் வசூல் பணி தாற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
    மின் நுகர்வோர் இம்மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 2.45 மணி வரை மட்டுமே வசூல் மையம் மற்றும் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்த இயலும். மேலும், ஏப்ரல் 2ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai