Enable Javscript for better performance
தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    பாரம்பரிய உணவுப் பொருள்களில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் இத்திருவிழாவை, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    உணவுத் திருவிழாவில், முதலூர் மஸ்கோத் அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், கடம்பூர் போளி, கீழஈரால் சேவு, உடன்குடி சில்லு கருப்பட்டி மற்றும் பல பாரம்பரிய உணவு வகைகளின் செயல்முறை விளக்கம், சிறு தானியங்களின் அவசியம், ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது.
    மேலும், சிறுதானியங்கள் மூலம் உணவு பொருள்கள் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கமும், சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும், பிரதான உணவகங்களின் அரங்கங்களும் இடம் பெற்றிருந்தன.
    இதையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இரண்டாவது நாளான சனிக்கிழமை (மார்ச் 24) மாலை 5 மணிக்கு செல்லப்பிராணிகள் கண்காட்சியும், 6.30 மணிக்கு பொதுமக்களுக்கு இசை நாற்காலி போட்டியும், 7.30 மணிக்கு காய்கனி செதுக்குதல் போட்டியும், 8.30 மணிக்கு சமையல் போட்டியும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) இசைக்கச்சேரி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai