Enable Javscript for better performance
பாண்டவர்மங்கலம்: உள்ளூர் நீராதாரப் பணி விரைந்து முடிக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    பாண்டவர்மங்கலம்: உள்ளூர் நீராதாரப் பணி விரைந்து முடிக்கப்படுமா?

    By DIN  |   Published on : 24th March 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பாண்டவர்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உள்ளூர் நீராதாரப் பணி விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 36 ஊராட்சிகளில், பாண்டவர்மங்கலம், இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி ஆகிய ஊராட்சிகள் வருவாய் மிகுந்தவை. பாண்டவர்மங்கலம் ஊராட்சி சுமார் 21ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வங்கிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளன.
    இந்த ஊராட்சிக்கு உள்பட்ட செவல்குளம் கண்மாயில் 14ஆவது நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் 2015-16ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைக்கப்பட்டது. இந்தக் கிணற்றில் இருந்து கிடைக்கப்பெறும் உள்ளூர் நீராதாரம் மூலம் ராஜீவ் நகர் மற்றும் சண்முகசிகாமணி நகர் பகுதிகளில் தண்ணீர் வழங்குவதற்கு மோட்டார் மற்றும் குழாய் அமைப்பதற்காக ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பணி நடைபெற்று வருகின்றன.
    ராஜீவ் நகர், சண்முகசிகாமணி நகர் ஆகிய பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தலா 1 லட்சம் லிட்டர் தண்ணீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. அதுபோல, பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை தெரசா நகர், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் தலா 30ஆயிரம் லிட்டர் தண்ணீர் 4 நாள்கள் வழங்கப்படுகிறது.
    உள்ளூர் நீராதாரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அதன் மூலம் ராஜீவ் நகர் மற்றும் சண்முகசிகாமணி நகர் பகுதி மக்களுக்கு தண்ணீர் கூடுதலாக வழங்க முடியும். எனவே பணிகளை விரைவுபடுத்தி தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டவர்மங்கலம் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சுகாதாரக் கேடு பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.லட்சம் லிட்டர் தண்ணீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. அதுபோல, பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை தெரசா நகர், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் தலா 30ஆயிரம் லிட்டர் தண்ணீர் 4 நாள்கள் வழங்கப்படுகிறது.
    உள்ளூர் நீராதாரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அதன் மூலம் ராஜீவ் நகர் மற்றும் சண்முகசிகாமணி நகர் பகுதி மக்களுக்கு தண்ணீர் கூடுதலாக வழங்க முடியும். எனவே பணிகளை விரைவுபடுத்தி தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டவர்மங்கலம் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சுகாதாரக் கேடு பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai