Enable Javscript for better performance
மாணவி விவகாரம்: பன்னம்பாறையில் 2ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாணவி விவகாரம்: பன்னம்பாறையில் 2ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறையில் பள்ளி மாணவியை கேலி செய்ததாக எழுந்த பிரச்னையில், மாணவர்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பன்னம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவியை கேலிலி செய்ததாக, மாணவர் ஒருவரை அந்த மாணவியின் அண்ணன் சுடலை தாக்கினராம். இதுதொடர்பாக அவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் தரப்பினர் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். மாணவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்தனர். இருதரப்பினரிடமும் சாத்தான்குளம் போலீஸார் பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாணவியின் அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
    இதைக் கண்டித்து வெள்ளிக்கிழமையும் மாணவர்- மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கல்வி அதிகாரி கிறிஸ்டி பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். போலீஸார் வழக்குப்பதிவை வாபஸ் பெறாததால் கல்வி அதிகாரியின் பேச்சுவார்த்தையை மாணவர்களின் பெற்றோர்கள் புறக்கணித்தனர்.
    இதனிடையே, பள்ளியின் தேர்வு நேரத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai