Enable Javscript for better performance
மாநகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் வெள்ளிக்கிழமை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
    தூத்துக்குடி மாநகராட்சி 5 ஆவது வார்டுக்குள்பட்ட எட்டயபுரம் சாலை வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளிக்கிழமை திடீரென மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அவர்கள் கூறியது: தூத்துக்குடி மாநகராட்சி 5 ஆவது வார்டுக்குள்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சங்கரப்பேரி ஊராட்சியில் இருந்து பிரிக்கப்பட்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துத்தரப்படவில்லை.
    அரசுக்கு அனைத்து வரிகளையும் முறைப்படி செலுத்தும் எங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. இந்நிலையில், 4ஆவது பைப்லைன் திட்டம் மூலம், குடிநீர் வழங்குவதாக கூறி மீட்டர் பொருத்தப்பட்டு பல நாள்களாகியும் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை.
    எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்க மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் அலுவலகத்தில் இல்லாததால் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai