Enable Javscript for better performance
மானாவாரி விவசாய மேம்பாடு: வேளாண் அலுவலர்களுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மானாவாரி விவசாய மேம்பாடு: வேளாண் அலுவலர்களுக்குப் பயிற்சி

    By DIN  |   Published on : 24th March 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் இரண்டாவது தொகுப்பு திட்டத்தில், ஐந்து அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இப்பயிற்சியை, தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாந்த் தொடங்கிவைத்து பேசியது:
    நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத் திட்டத்தில், மானாவாரி வேளாண்மை மேம்பாடு, நீர் ஆதார மேம்பாடு, மண்வளப் பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. எனவே, இந்தத் திட்டம் மானாவாரி சாகுபடி அதிகம் செய்யப்படும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் என்றார்.
    நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசுத் திட்டம்) தெய்வநாயகம், கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் சுதாகர், ஆனந்தராஜ், கால்நடை மருத்துவர் கிறிஸ்டி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, வேளாண் விற்பனைத் துறை துணை இயக்குநர் மகாதேவன், மத்திய அரசு திட்ட வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    பயிற்சி முகாமில், கோவில்பட்டி, புதூர், விளாத்திக்குளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, கால்நடைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai