Enable Javscript for better performance
மார்ச் 26, 27இல் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பயிற்சி: முன்பதிவுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 26, 27இல் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பயிற்சி: முன்பதிவுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த நீர்வாழ் உயிரின வளர்ப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் தருவைக்குளத்தில் இயங்கிவரும் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணையில் மார்ச் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் 'ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த நீர் வாழ் உயிரின வளர்ப்பு' குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
    பயிற்சியின்போது, ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த நீர் வாழ் உயிரின வளர்ப்பின் அடிப்படைத் தத்துவம் மற்றும் தற்போதைய நிலை, வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வளர்ப்பிற்கேற்ற கடல் மீன்களின் உயிரியல் பண்புகள், வளர்ப்பு கூண்டுகள் அமைக்கும் முறைகள், கூண்டுகளில் வளர்க்கப்படும் கடல் மீன்களின் உணவு முறைகள், கூண்டுகளில் கடல் மீன்களின் வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மை, ஒருங்கிணைந்த் கடல்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த பல்நிலை உணவு சார்ந்த கடல்நீர் வாழ் உயிரின வளர்ப்பின் பொருளாதார பயன்கள் போன்ற பாடங்கள் செயல்முறை விளக்கங்களுடன் நடத்தப்படும்.
    பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ. 500 செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் மார்ச் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி 628 105 என்ற முகவரியில் நேரிலும், 0461-2277424 என்ற தொலைபேசி எண்ணிலும், 9994450248 மற்றும் 9994450663 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai