Enable Javscript for better performance
இளையரசனேந்தல் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    இளையரசனேந்தல் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா மற்றும் காந்திய அமைதி வழி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
    கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அணி சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியை நிர்மலா தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் பொம்மலாட்டம் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கருத்துக்களையும், காந்திய அமைதி வழியையும் மாணவர், மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில், பள்ளி மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai