Enable Javscript for better performance
குலசேகரன்பட்டினம் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரன்பட்டினம் அருள்தரும் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு சிவகாமி அம்பிகை தவக்கோலத்தில் உலா போதல், 9 மணிக்கு புதுத்தெரு தவச்சாலை மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 4 மணிக்கு சுவாமி சிதம்பரேஸ்வரர் மணாளரா ய் இடப ஊர்தியில் எழுந்தருளல், 6.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்தல், இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் திருவீதியுலா போய் திருக்கோயில் வந்தடைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் பல்வேறு வகையான தீபாராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. 8.30 மணிக்கு பட்டினப்பிரவேசம், இரவு 7.30 மணிக்கு திருப்பொன்னூஞ்சல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்,குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் நிர்வாக அதிகாரி இரா. ராமசுப்பிரமணியன், பிஎஸ்எம் பள்ளித் தலைமையாசிரியர் சுபாஷ்சந்திரபோஸ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மார்ச்.31, ஏப்.1, 2 ஆம் தேதிகளில் இரவு 7.30 மணிக்கு திருப்பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெறும். ஏப். 3ஆம் தேதி காலை 7.15 மணிக்கு செம்பொன்நீராட்டு, நண்பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகள், இரவு 6.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai