Enable Javscript for better performance
கோவில்பட்டியில் மாணவர், மாணவியிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் மாணவர், மாணவியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    கோவில்பட்டி அறிஞர் அண்ணாநகர் மகாராஜபுரம் காலனி 3ஆவது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் மணிகண்டகுமார்(19). கோவில்பட்டியில் உள்ள பாலிடெக்னிக்கில் சிவில் என்ஜினீயரிங் படித்து வரும் இவர், வியாழக்கிழமை இரவு மந்தித்தோப்பு சாலையில் உள்ள சர்க்கஸ் மைதானம் மேல்புறம் தனியாருக்குச் சொந்தமான காலிமனை பகுதி வழியாக  மாதாங்கோவில் தெரு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
    அப்போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் மணிகண்டனை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    பள்ளி மாணவியிடம் நகை பறிப்பு: கோவில்பட்டி கடலைக்காரத் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் நர்மதா (15). அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் இவர், தனி வகுப்புக்கு பத்திரகாளியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர், நர்மதா அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு அங்கு தயாராக பைக்குடன் நின்று கொண்டிருந்தவருடன் தப்பிவிட்டார்.
    இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai