Enable Javscript for better performance
கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி பூஜை

    By DIN  |   Published on : 31st March 2018 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் அருள்மிகு ஸ்ரீ மகாபுவன காந்தாரி அம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது. 
    இக்கோயிலின் 52ஆம் ஆண்டு பங்குனிப் பொங்கல் திருவிழா இம்மாதம் 27ஆம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 2ஆம் திருநாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு ஹோமம், ஸ்ரீ தர்மர் சுவாமி நூதன விக்ரஹ ப்ரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 3ஆம் திருநாளான வியாழக்கிழமை மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது. 
    4ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 9  மணிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
    .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai