Enable Javscript for better performance
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா  

    By DIN  |   Published on : 31st March 2018 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
    கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. 
    பின்னர் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கும்ப பூஜை மற்றும் சண்முகர் ஜெபம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் கதிர்வேல் முருகன், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர் சுப்பிரமணியருக்கு 21 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. 
    பூஜையில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர். 
    இதுபோல, கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண முருகர் கோயிலிலும், பழனி ஆண்டவர் கோயில், ஜோதி நகர் ஜோதி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள ஜோதி முருகர் சன்னதியிலும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.
    உடன்குடி: தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், கூழையன்குண்டு கல்லால் அய்யனார் திருக்கோயில், செம்புக்குட்டி அய்யனார் திருக்கோயில், மானம் காத்த அய்யனார் திருக்கோயில், பொன்வண்டு அய்ய னார் திருக்கோயில், கந்தபுரம் உடையார் சுவாமி திருக்கோயில், வட்டன்விளை பாதகரமுத்தி சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து  கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பால்குட பவனி, தீபாராதனை, திருவிளக்கு பூ ஜை, பொங்கல் இடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றஸ். இதில், திரளான பக்தர்கள் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வந்து பொங்கலிட்டு தங்கள் குலதெய்வங்களை வழிபட்டனர்.

    ஆறுமுகனேரியில்...
    மேலப்புத்துக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோயில், கீழநாலுமூலைக்கிணறு குன்று மலை சாஸ்தா திருக்கோயில், தாய்விளை இல்லங்குடி சாஸ்தா திருக்கோயில், பரமன்குறிச்சி செல்லப்பிள்ளை அய்யனார் திருக்கோயில், ராஜாங்கபுரம் ஆயிரங்கா பதி சாஸ்தா திருக்கோயில், கல்விளை ராஜலிங்க சாஸ்தா திருக்கோயில், ஆறுமுகனேரி பேயன்விளை தர்மகுட்டி சாஸ்தா திருக்கோயில், செய்துங்க நல்லூர் அருகேயுள்ள ஆழிகுடி குருத்துடையார் சாஸ்தா உள்பட நூற்றுக்கணக்கான திருக்கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    திருச்செந்தூரில்...
    நாசரேத் அருகேயுள்ள கடையனோடை வெயிலுமுத்து என்ற வெயிலுகந்த சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சுவாமிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. 
    திருச்செந்தூர் அருகேயுள்ள காந்திபுரம் தலையூன்றி சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai