Enable Javscript for better performance
சாலை விரிவாக்கப் பணி ஓடைக் கடைகளுக்கு பாதிப்பின்றி  மேற்கொள்ள வலியுறுத்தி அமைச்சரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    சாலை விரிவாக்கப் பணி ஓடைக் கடைகளுக்கு பாதிப்பின்றி  மேற்கொள்ள வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

    By DIN  |   Published on : 31st March 2018 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி பிரதான சாலையில் நடைபெறவுள்ள சாலை விரிவாக்கப் பணியினால், ஓடைக் கடை வியாபாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விரிவாக்கப் பணியை நடத்த வேண்டும் என அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மண்டலச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜுவிடம் அளித்த மனுவின் விவரம்: 
    கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் லாயல் மில் மேம்பாலம் வரை ரூ. 7 கோடியில் சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் கடைகள் மற்றும் ஓடைக்கடைகளில் 80  ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வரும் கடைக்காரர்கள் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக சாலை விரிவாக்கப் பணிக்கு என்று கடைகளில் குறியீட்டு கொடுத்த அளவிற்கு தாங்களே அவைகளை இடித்து குறிப்பிட்ட பகுதிக்குள் கடைகளை அமைத்துக் கொண்டுள்ளோம். 
    இப்பகுதிகளில் உள்ள ஓடைகளிலும் கழிவுநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக மராமத்துப் பணிகளும் செய்து வருகிறோம். இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் வியாபாரிகளுக்கு எதிராக செயல்பட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்தக் கடைகளை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. 
    எனவே, திருக்கோயில் மற்றும் ஓடைக் கடைக்காரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி சாலை விரிவாக்கப் பணி நடைபெற வேண்டும் என்றும், அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் ஒத்துழைத்து சாலை விரிவாக்கத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai