Enable Javscript for better performance
தூத்துக்குடியில் சிலுவைப் பாதை பவனி- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் 435 ஆண்டுகள் பழமை வாய்ந்த பனிமய மாதா பேராலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிலுவைப் பாதை பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொன்டனர்.
    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தின் கடைசி வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாக கருதப்படுவதால் அன்றையதினம் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் இயேசு கிறிஸ்து மக்களுக்காக அனுபவித்த பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ தேவாலங்களில் சிலுவைப் பாதை பவனி நடத்தப்படுவது உண்டு.
    அதன்படி,  தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 435 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான பனிமய மாதா பேராலயத்தில் வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, ஆலய பங்குத்தந்தை லெரின் டிரோஸ் தலைமை வகித்தார்.
     நிகழ்ச்சியின்போது,  இயேசு சிலுவையை சுமப்பது போன்ற திருச்சொரூபம் ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது.  அப்போது 14 ஸ்தலங்களில் திருச்சொரூபத்தை நிறுத்தி பிராத்தனை செய்யப்பட்டது. இந்த சிலுவைப் பாதை பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். 
    மேலும், சிலுவைப் பாதையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே பக்தர்கள் நேர்ச்சையாக மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.  மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது.

    கோவில்பட்டியில்..
    புனித வெள்ளியையொட்டி கோவில்பட்டியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. 
    புனித வளனார் ஆலய வளாகத்தில் மாலையில் புனித வெள்ளி ஆராதனை தொடங்கியது. இதையடுத்து மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் இயேசுவின் சிலுவைப்பாடுகள் நிகழ்வுகள் நடைபெற்றது. 
    தொடர்ந்து, ஆலயப் பங்குத்தந்தை பீட்டர், உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ஸ்டாலின், கருமாத்தூர் தூய அருளானந்தர் கல்லூரிச் செயலர் மணிவளன், பெங்களூர் கமினஸ் சபை அருள்தந்தை பேசில் செபாஸ்டஸ்சிங், அருள்தந்தை அந்தோணிராஜ் ஆகியோர் இணைந்து திருச்சிலுவை ஆராதனை நடத்தினர். 
    கோவில்பட்டி தூய பவுலின் ஆலயத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய மும்மணி தியான ஆராதனை பிற்பகல் 3.30 மணிக்கு முடிவடைந்தது. கோயில் சேகருகுருவானவர் ஆசீர்ஜோசப், சாந்தினி ஆசீர், உதவி குரு சாமுவேல் இயேசுதாசன் ஆகியோர் தேவசெய்தி அளித்தனர். இதில் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai