Enable Javscript for better performance
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை

    By DIN  |   Published on : 31st March 2018 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காது கேளாமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் காக்ளியர் இம்பிளான்ட் அறுவைச் சிகிச்சை முதல் முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
    இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் வெள்ளிக்கிழமை கூறியது: குழந்தைகளுக்கு பிறவியின்போதே அதிகம் ஏற்படும் ஊனம் என்பது காது கேளாமையே. காது கேட்கவில்லை என்றால் பேச்சு வராது. ஆகையால் பெற்றோர்கள் இதனை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும். 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்வதால் நல்ல முறையில் காது கேட்கும்.   இந்த சிகிச்சைக்கு ரூ. 10 லட்சம் வரை செலவாகும். 
    ஆனால், தமிழக அரசு சார்பில் இலவசமாக இதுவரை 2 ஆயிரம் குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. தற்போது, முதல் முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காக்ளியர் இம்பிளான்ட் கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
    பேட்டியின்போது, அறுவைச்சிகிச்சை குழுவில் இடம்பெற்ற மருத்துவர்கள் செந்தில், மேரிநிர்மலா, சந்தானகிருஷ்ணன், விஜயராகவன், இன்பரசு, மயக்கவியல் நிபுணர் முத்துகண்ணன் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai