Enable Javscript for better performance
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 5.60 கோடி உபரி வருவாய் கிடைக்கும்: நிதிநிலை அறிக்கையில் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 5.60 கோடி உபரி வருவாய் கிடைக்கும்: நிதிநிலை அறிக்கையில் தகவல்

    By DIN  |   Published on : 31st March 2018 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகாரட்சியில் நிகழ் நிதியாண்டில் உபரி வருவாய் மூலம் ரூ. 5.60 கோடி கிடைக்கும் என அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி மாநகராட்சியில் 2018-2019 ஆம் ஆண்டின் உத்தேச வரவு செலவு அறிக்கை, 2017-2018 ஆம் ஆண்டின் திருத்திய வரவு செலவு அறிக்கை கடந்த 28 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி, 2017-2018 ஆம் ஆண்டுக்கு வருவாய் நிதியில் வரவினங்களும், செலவினங்களும் இறுதி செய்யப்பட்டன.
    வருவாய் நிதி: நிகழாண்டில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ. 14.79 கோடியும், அரசு சுழல் நிதியாக ரூ. 3.55 கோடியும், அரசு மானியமாக ரூ. 67.28 கோடியும், ஏனைய வருமானங்கள் மூலம் ரூ. 7.13 கோடியும் என மொத்தம் ரூ. 92.76 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இதில் நிகழாண்டுக்கான சாலை, கட்டடங்கள் மற்றும் இதர பராமரிப்பு செலவுகளுக்காக ரூ. 16.09 கோடியும், இயக்க செலவுகளுக்காக ரூ. 5.93 கோடியும், ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர்பான செலவுகளுக்கு ரூ. 45.56 கோடியும், நிர்வாக மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 23.34 கோடியும் என மொத்தம் ரூ. 90.92 கோடி  செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உபரியாக ரு. 1.84 கோடி வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
    குடிநீர் மற்றும் வடிகால் நிதி: நிகழாண்டில் குடிநீர் வரியாக ரூ. 7.82 கோடியும், பயன்பாட்டு கட்டணமாக ரூ. 45.39 கோடியும், இதர வருமானமாக ரூ. 2.3 கோடியும் என மொத்தம் ரூ. 55.51 கோடி வருமானமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இதில், குடிநீர் பணி இயக்க செலவுக்காக ரூ. 5.11 கோடியும், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ. 10.79 கோடியும், ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர் செலவுக்காக ரூ. 3.07 கோடியும், நிர்வாக செலவுகளுக்காக ரூ. 8.12 கோடியும், நிதி செலவுகளுக்காக ரூ. 25. 53 கோடியும் என மொத்தம் ரூ. 52. 63 கோடி செலவாகலாம் என மதிப்பீடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ. 2.87 கோடி வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
    ஆரம்ப கல்வி நிதி: நிகழாண்டில் கல்வி வரியாகவும் மற்றும் இதர வருமானமாகவும் ரூ. 3.12 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ. 2.24 கோடி செலவு இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ. 88.52 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    உபரி வருவாய்: நிகழ்நிதியாண்டான 2018-2019 ஆம் ஆண்டில் வருவாய் நிதியில் ரூ. 1.84 கோடியும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 2.87 கோடியும், கல்வி நிதியில் ரூ. 88.52 லட்சமும் என மொத்தம் உபரியாக ரூ. 5.60 கோடி வருமானம் ஏற்படும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai