Enable Javscript for better performance
தென்திருப்பேரை கோயிலிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தென்திருப்பேரை கோயிலிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 31st March 2018 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நவதிருப்பதி கோயில்களில் 7ஆவது தலமாகவும்  சுக்கிரன் தலமாகவும் விளங்ககூடிய தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் திருக்கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
    இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.45 மணிக்கு திருமஞ்சனம், காலை 6 மணிக்கு நித்தியல் கோஷ்டி, காலை 7.50 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
    திருவிழா நாள்களில் தினமும் காலையில் தோளுங்கியன் வீதி புறப்பாடும், மாலையில்  பரங்கி நாற்காலிலி வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி  நிகரில் முகில்வண்ணன் எழுந்தருளுகிறார்.
    ஏப். 3ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு கருட சேவையும், அன்ன வாகன சேவையும் நடைபெறுகிறது. ஏப். 7ஆம் தேதி 9ஆம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.
    நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி அஜித்,  தர்கார் விஸ்வநாத், ஆழ்வார்திருநகரி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai