Enable Javscript for better performance
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
    கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் வீரவாஞ்சி நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சின்ராஜ் (30). 
    இவர் மீது கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 1 மற்றும் 2இல் பல்வேறு வழக்கு விசாரணை நடைபெற்று  வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காலம்தாழ்த்தி வந்ததையடுத்து இவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும், கயத்தாறு காவல் நிலைய வழக்கு ஒன்றிலும் இவர் தேடப்பட்டு வந்தார். 
    இதையடுத்து, மாவட்ட எஸ்.பி.  மகேந்திரன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் ஆலோசனையின்பேரில், ஆய்வாளர்கள் விநாயகம் (மேற்கு), பவுல்ராஜ் (கிழக்கு) ஆகியோர் தலைமையில், தனிப்படை போலீஸார் சின்ராஜை தேடி வந்தனர். 
    இந்நிலையில், மந்தித்தோப்பு சாலையில் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது  அவர் சின்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai