Enable Javscript for better performance
மானாடு கோயிலில் புதிய தேர் செய்ய நாள்கோள் விழா- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே மானாடு கலியுக வரத சாஸ்தா திருக்கோயிலில் புதிய தேர் செய்வதற்கான நாள்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் உள்ள தேரானது 400 ஆண்டுகளாக ஓடாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கோயிலுக்கு புதிய தேர் செய்யும் வகையில் இதே ஊரைச் சேர்ந்தவரும், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவருமான மு. செல்லத்துரை பாண்டியன் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
    தேர் செய்வதற்கான நாள்கோள் விழா வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. மு. செல்லத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். விழாவில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்ட இளைஞரணிச் செயலர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai