Enable Javscript for better performance
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்: புதுச்சேரி குழுவினர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்: புதுச்சேரி குழுவினர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 31st March 2018 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் இருந்து வந்த பிரசார பயணக் குழுவினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை கண்டித்தும், அந்த ஆலையை மூட வலியுறுத்தியும் ஆலையின் அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 47ஆவது நாளான வெள்ளிக்கிழமை அந்தப் பகுதி பெண்கள், மாணவ, மாணவிகள் போராட்டக் களத்தில் கலந்து கொண்டு சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
    பிரசார குழுவினர்: இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி புதுச்சேரியில் இருந்து உமாமகேஸ்வரி என்ற பெண் உள்ளிட்ட 6 பேர் இருசக்கர வாகனம் மூலம் பிரசார பயணம் மேற்கொண்டு வெள்ளிக்கிழமை தூத்துக்குடியை வந்தடைந்தனர். புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி விழுப்புரம், மதுரை வழியாக 500 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து தூத்துக்குடி வந்தடைந்த அவர்கள், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டனர். பின்னர், போராட்டம் நடைபெற்று வரும் அ. குமரெட்டியாபுரம் கிராமத்துக்குச் சென்ற பிரசார குழுவினர் தங்களது ஆதரவை தெரிவித்து தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai