Enable Javscript for better performance
"கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் சிறந்த தனியார் பள்ளிகளில் பயில விண்ணப்பிக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்  சிறந்த தனியார் பள்ளிகளில் பயில விண்ணப்பிக்கலாம்'

    By DIN  |   Published on : 18th May 2018 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறந்த தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் ஆய்வாளர் க. பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தொழிலாளர் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1,  பிளஸ் 2  வரை சிறந்த தரத்திலான கல்வி வழங்க அரசு உத்திரவிட்டுள்ளது.  
       அதன்படி, 2018-19 ஆம் கல்வி ஆண்டுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
      அரசு, அரசு நிதியுதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில், 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொடக்க கல்வித்துறையின் உதவியுடன் தனித்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, வட்டாரத்துக்கு ஒரு மாணவர், மாணவி வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் ம் வகுப்பு வரை கல்வி வழங்கப்படும்.  இந்தத் திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பில் மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
     மேலும்,  பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்ற கட்டுமானத் தொழிலளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளில் மாவட்டத்துக்கு 3 மாணவிகள் உள்ளிட்ட 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் பிளஸ் 1,  பிளஸ் 2 வரை கல்வி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ்  பிளஸ் 1 வகுப்பில் மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
      அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு நிர்ணயம் செய்துள்ள பள்ளி கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் ரூ.15, 000 மற்றும் பராமரிப்புக் கட்டணம் ரூ.5, 000 ஆகியவை  தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டொன்றுக்கு வழங்கப்படும். 
     இதற்கான விண்ணப்பத்தை  W​W​W.​T​H​O​O​T​H​U​K​U​D​I.​N​I​C.​I​N என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), 1  விக்டோரியா தெரு, தூத்துக்குடி - 628001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai