Enable Javscript for better performance
கூட்டுறவு சங்க ஊழியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் வியாழக்கிழமை இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      தமிழகத்தில் 2 ஆவது, 3 ஆவது 4 ஆவது நிலைகளில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு இடைகால நிர்வாகமோ, செயலாட்சியரோ அமைக்கப்படாத நிலை இருந்து வருகிறது.
     இதனால்,  தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் முடங்கி உள்ளதாகவம், சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    பின்னர் அவர்கள் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, மே 21 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக கூட்டுறவு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலர் சுதாகர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai