Enable Javscript for better performance
கோவில்பட்டி அருகே சாலைப் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.39.85 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.  
    தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2017-18ன் கீழ் இலுப்பையூரணி ஊராட்சி கணேஷ் நகர் முதல் மூக்கரை விநாயகர் கோயில் வழியாக பூரணம்மாள் காலனி வரை செல்லும் 1.1 கி.மீ. தொலைவு  சாலை அமைக்கும் பணியை 
    அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார். 
      நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் , கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலஹரிஹரமோகன், வட்டாட்சியர் பரமசிவன், ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வன், வருவாய் ஆய்வாளர் சிவராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் அபிராமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் விஜயபாண்டியன், ரமேஷ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai