Enable Javscript for better performance
தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 18) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 18) காலை 10.30 மணிக்கு,  தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2,  பட்டப்படிப்பு,  பி.இ.,  டிப்ளமோ,  ஐடிஐ  மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றுகளுடன்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai