Enable Javscript for better performance
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில்இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
     இதுகுறித்து சார் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 18) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
     தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீதமுள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் வேலையில் இல்லாத மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பிற திட்டங்கள் மூலம் உதவித்தொகை பெறாத தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
     முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு முகாம் மாதாந்தோறும் கோட்ட அளவில் சுழற்சி முறையில் ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai