Enable Javscript for better performance
தொழிலாளி வீட்டில் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அருகே கட்டடத் தொழிலாளி வீட்டில் புதன்கிழமை இரவு நான்கரை பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம   நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
       தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து,  கட்டடத் தொழிலாளி. இவர், தனது மனைவி உஷாராணியுடன் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த  மர்ம த நபர்கள் காளிமுத்து குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த அறையின் வெளிக்கதவை பூட்டிவிட்டு,  பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகைகள், ரூ. 8 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து காளிமுத்து அளித்த புகாரின்பேரில் புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai