Enable Javscript for better performance
மக்களைப் படிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல்ஹாசன்- Dinamani

சுடச்சுட

    

    மக்களைப் படிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல்ஹாசன்

    By DIN  |   Published on : 18th May 2018 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களைப் படிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
    தென் மாவட்ட மக்களைச் சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை குமரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், இரண்டாவது நாளாக திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைச் சந்தித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை காயல்பட்டினம், ஆறுமுகனேரி மற்றும் புன்னக்காயல் பகுதியில் மக்களை நேரில் சந்தித்தார்.
    காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் அருகில் மாலை 4.30 மணிக்கு பொதுமக்களைச் சந்தித்து அவர் பேசியதாவது:
    ரமலான் நோன்பு நேரத்தில் இங்கு வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்களைப் படிப்பதற்காகவும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் அரசிலுக்கு வந்துள்ளேன். இந்த சந்திப்பு அடிக்கடி நடக்கும் என்றார்.
    மாவட்டச் செயலர் சேகர், மேலிடப் பிரதிநிதி அப்துல் ரகீம், நகரப் பொறுப்பாளர் மந்திரம், செயலர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஹிதாயத்துல்லா, கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பின்னர், ஆறுமுகனேரி மற்றும் புன்னக்காயல் பகுதியில் மக்களை கமல்ஹாசன் சந்தித்துப் பேசியபோது, மக்கள் நீதி மய்யத்தின் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும், புன்னக்காயலைச் சேர்ந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
    ஸ்ரீவைகுண்டம்:  தொடர்ந்து அவர் ஏரலில் பொதுமக்களிடையே பேசினார். அப்போது நரிகுறவர் சமூதாயத்தை சேர்ந்த தம்பதியின் பெண் குழந்தைக்கு மனோகரி தேவதை என பெயரிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai