Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
    தூத்துக்குடி சுப்பையாபுரம் 3 ஆவது தெருவைச் சேர்ந்தவர் சரவணண் மகன் சிவகணேஷ் (18). இவர், தூத்துக்குடியில் உள்ள ஒரு சவுன்ட் சர்வீஸ் கடையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் உள்ள ஒரு கோயில் கொடைவிழாவை முன்னிட்டு அங்கு டியூப் லைட்டுகளை கட்டும் பணியில் புதன்கிழமை இரவு சிவகணேஷ் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்ட சிவகணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai