Enable Javscript for better performance
மே 19 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முஹம்மதுசாலிஹாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி ஆகிய பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதி, சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட முத்துநகர், சிட்கோ, ஜோதி நகர், புதுரோடு ஆகிய பகுதி, சிவஞானபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைதாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதி, செட்டிகுறிச்சி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மே 19)  காலை 9  மணி முதல் முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் தடைபடும். 
        கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம் ஆகிய பகுதி, எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி ஆகிய பகுதிகள், எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என்.புதூர், நாரைகிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒருபகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்குசெழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் காற்றாலை மின்தொடர் 1,  2   ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மே 19)  பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள 4 டஞகஉ ஈட.நஜ்ண்ற்ஸ்ரீட் -யை இடமாற்றம் செய்வதற்காகவும், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகவும், கோவில்பட்டி கிழக்கு மின் விநியோகப் பிரிவிற்கு உள்பட்ட எட்டயபுரம் சாலை, ஜோதி நகர், சுப்பிரமணியபுரம், பழனி ஆண்டவர் கோயில் தெரு, பங்களாத் தெரு, ஸ்டாலின் காலனி, மில் தெரு, செல்லப்பாண்டியன் நகர், வக்கீல் தெரு, அரசு அலுவலக வளாகம், செக்கடித் தெரு, அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புதுரோடு, பசுவந்தனை சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை ( மே 19 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகரப் பகுதியில்...
    தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 19) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
      இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் வே. தென்னரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. மேலும், அன்றையதினம் மின்பாதையில் மின் கடத்தியின் திறன் மேம்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. இதன் காரணமாக  அன்றையதினம், தூத்துக்குடி ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,  தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி சாலை, வி.இ. சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துக்கிருஷ்ணாபுரம், முத்தம்மாள்காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், மில்லர்புரம்,  அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,  சிதம்பர நகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார் புரம், போல்பேட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai