Enable Javscript for better performance
வல்லநாடு நீரேற்று நிலைய மின்மாற்றியில் பழுது: தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வல்லநாடு நீரேற்று நிலைய மின்மாற்றியில் பழுது: தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வல்லநாடு நீரேற்று நிலைய மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வல்லநாடு நீரேற்று நிலையத்தின் தெப்பம் பகுதியில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி இரவு மின்னல் பாய்ந்ததால் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது.   இதனால், மாநகரப் பகுதிக்கு வரும் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. 
     இருப்பினும், ஓரிரு நாள்களில் பணிகள் முடிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் தாங்களுக்கு கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளவும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai